search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவையாறு மணல் கடத்தல்"

    திருவையாறு அருகே அனுமதியின்றி மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
    திருவையாறு:

    திருவையாறை அடுத்த அம்மன்பேட்டை தெற்குத்தெருவை சேர்ந்த யேசுதாஸ் மகன் தர்மபிரபு (23). இவர் சொந்தமாக மாட்டு வண்டி வைத்துள்ளார்.

    இவர் அம்மன்பேட்டை அருகே வெட்டாற்றில் அரசு அனுமதியில்லாமல் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக் கொண்டு மணக்கரம்பை மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியில்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. உடனே மாட்டு வண்டியை பறிமுதல் செய்து நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து தர்மபிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் திருவையாறை அடுத்த மணக்கரம்பை புது பைபாஸ் ரோட்டில் வந்த மினிலோடு வேனை மறித்தபோது அதிலிருந்து டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    மினி லோடு வேனை சோதனை செய்தபோது அரசு அனுமதியில்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து மினிலோடு வேனை பறிமுதல் செய்து லாரி உரிமையாளரையும், டிரைவரையும் தேடிவருகின்றனர்.

    திருவையாறு அருகே மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Sandrobbery

    திருவையாறு:

    திருவையாறு அடுத்த வீரசிங்கம்பேட்டை மெயின் ரோட்டில் தாசில்தார் லதா தலைமையில் மண்டல துணை தாசில்தார் பழனிவேல், வருவாய் ஆய்வர் கார்த்திபன், ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அய்யம்பேட்டையில் இருந்து கண்டியூர் நோக்கி வந்த லாரியை மறித்து சோதனை செய்தபோது அந்த லாரியில் அரசு அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    உடனே லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த திருச்சி துவாக்குடி மலையை சேர்ந்த செல்வம் என்பவரை பிடித்து திருவையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவையாறு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். #Sandrobbery

    ×